Sunday 14 April 2019

பெயர் மாற்றக் கமிட்டியின் கூட்டம் 26.04.2019 அன்று நடைபெறும்

ஒரு சில ஊழியர் கேடர்களின் பெயர்களை மாற்ற வேண்டி உள்ளது. இந்த கேடர்களுக்காக பெயர் மாற்றக் கமிட்டி பரிந்துரைத்த புதிய பெயர்களை நிர்வாகக் குழு ஏற்றுக்கொள்ளவில்லை. ஊழியர் தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி புதிய பரிந்துரைகளை மீண்டும் அனுப்ப வேண்டுமென நிர்வாகக் குழு அந்தக் கோப்பை திருப்பி அனுப்பி உள்ளது. நமது தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக அந்தக் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. GM(Restg) அவர்களை சந்தித்த ஊழியர் தரப்பு அந்தக் கூட்டத்தை 26.04.2019 அன்று நடத்தலாம் என கேட்டுக் கொண்டுள்ளது. அந்த தேதியில் இந்தக் கூட்டம் நடைபெற்று புதிய பெயர்கள்முடிவு செய்யப்பட்டு விடும் என நமது மத்திய சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.