Saturday 25 April 2020

வேலூர் SSA ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

அன்பார்ந்த தோழர்களே     மத்திய மாநில சங்கங்களின் முடிவின்படி 18. 4 .2020 சனிக்கிழமை அன்று BSNLEU  மற்றும் AIBDPA  இரண்டு மாவட்ட சங்கங்கள் இணைந்து வேலூர் பகுதியில் உள்ள நமது ஒவ்வொரு ஒப்பந்த ஊழியருக்கும் ரூபாய் 1600 மதிப்புள்ள 25 கிலோ அரிசி மற்றும் 12 வகையான மளிகைப் பொருட்கள் வேலூர் BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில் 52 ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தோழர் B.ஜோதி சுதந்திர நாதன் மாவட்ட செயலாளர் , AIBDPA தோழர் எம் சதீஷ் குமார்மாவட்ட செயலாளர் TNTCWU, தோழர் C. ஞானசேகரன் மாநில உதவி செயலாளர் AIBDPA , தோழர் J. திருஞானசம்பந்தம் மாநில அமைப்பு செயலாளர் AIBDPA மற்றும் BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





Sunday 26 January 2020


Tuesday 14 January 2020


Tuesday 7 January 2020

Tuesday, 07 January, 2020 நாளை நடக்க உள்ள பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

நரேந்திர மோடி அரசாங்கம் அமலாக்கி வரும் கார்ப்பரேட் ஆதரவு, தொழிலாளர் விரோத, நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக, இந்திய தொழிலாளி வர்க்கம் 2020, ஜனவரி 8ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்துகிறது. இந்திய தொழிலாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்கும் BSNL ஊழியர் சங்கமும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறது. பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவது, தேசத்தின் சொத்துக்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது, முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றுவது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 3வது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளின் தீர்வையும், BSNL ஊழியர் சங்கம் கோரியுள்ளது. கிளை, மாவட்ட சங்கங்கள், இந்த வேலை நிறுத்தத்தை மிகப்பெரும் வெற்றி பெறச்செய்திட வேண்டும்.

Tuesday 31 December 2019


Tuesday 24 December 2019


Sunday 24 November 2019

25.11.2019 உண்ணா விரத போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம் :

உண்ணா விரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் காரணமாக, 22.11.2019 அன்று DIRECTOR (HR) மற்றும் BSNLEU, BTEU, FNTO, BSNL MS, ATM மற்றும் OA ஆகிய சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் ஆகியோர்களுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.

முக்கியமான பிரச்சனைகளின் மீது எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
குறிப்பாக, விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு பென்சன் COMMUTATION மற்றும் 3வது ஊதிய மாற்ற பலன்கள் தொடர்பாக நிர்வாகத்தால் எந்த ஒரு உறுதிமொழியையும் கொடுக்க முடியவில்லை. அதே போல, அக்டோபர் மாத ஊதியம், ஊதியத்தில் பிடித்தம் செய்தவற்றை உரிய மட்டங்களில் செலுத்துவது மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் ஆகியவை தொடர்பாகவும் எந்த ஒரு உறுதிமொழியையும் நிர்வாகத்தால் கொடுக்க முடியவில்லை. (அதன் விவரங்கள் இணைப்பில்)

எனவே 25.11.2019ல் நடத்த திட்டமிடப்பட்ட உண்ணாவிரத போராட்டம், திட்டமிட்டபடி நடத்திட வேண்டும். இந்த போராட்டம் மிகப்பெரும் வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.







விருப்ப ஓய்வு திட்டத்தில் விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களை வாபஸ் பெற அறைகூவல் விடப்படும்- தொலை தொடர்பு துறை செயலாளருக்கும், BSNL CMDக்கும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

விருப்ப ஓய்வு திட்டம்-2019ல் உள்ள சதி வலைகளைப் பற்றி தெரியாமல் பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல இசைவு தெரிவித்துள்ளனர். விருப்ப ஓய்வு திட்டம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், BSNL நிர்வாகம், ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல நிர்பந்திக்கிறது. ஓய்வூதியத்தை COMMUTE செய்வது, முன் தேதியிட்டு 3வது ஊதிய மாற்றம் நடைபெற்றால் அதற்கு விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களை தகுதியானவர்களாக மாற்றுவது, ஓய்வு பெறும் வயது தொடர்பாக 2000ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட உறுதி மொழியை மதித்து நடப்பது, பணியிட மாற்றம் மற்றும் பணிச்சுமை ஆகியவை தீர்வு காணப்பட வேண்டிய சில முக்கிய பிரச்சனைகள் ஆகும். விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு ஓய்வூதியம் COMMUTE செய்வது, அவர்களை மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கு தகுதியானவர்களாக மாற்றுவது ஆகிய பிரச்சனைகள் தீர்வு காணப்படவில்லை என்றால், அவர்கள், கடுமையான நஷ்டத்தை சந்திப்பார்கள். இந்த பிரச்சனைகளை உடனடியாக தீர்வு காண வேண்டி BSNLEU, BTEU, FNTO, BSNL MS, BSNL ATM மற்றும் BSNL OA ஆகிய சங்கங்கள் 25.11.2019 அன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த அறைகூவல் விட்டுள்ளன. இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்வு காணப்படவில்லை என்றால், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களை, தங்களின் விருப்பத்தை வாபஸ் பெற அறைகூவல் விடப்படும் என இந்த சங்கங்கள் அனைத்தும், தொலை தொடர்பு துறையின் செயலாளருக்கும், BSNL CMDக்கும் கடிதம் எழுதியுள்ளன.

Monday 21 October 2019

AUAB meeting on 30.10.2019 for deciding on the future course of action.


Following the decision of the Management to pay the salary on 23.10.2019, and also based on the appeal of the CMD BSNL and the Director (HR), the hunger strike scheduled on 18.10.2019, has been postponed. However, on the issue of BSNL’s revival and also on other important issues, it has been decided that the AUAB should hold it’s next meeting on 30.10.2019. Accordingly, the meeting of the AUAB will be held at 03:00 pm on 30.10.2019 at BSNL MS Office in Atul Grove Road.

BSNL ஊழியர்களிடையே மகத்தான ஒற்றுமை உருவாகியது-மேலும் பல அமைப்புகள் AUABயில் இணந்துள்ளன

BSNLல் நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே ஊழியர்களிடையே பலத்த ஒற்றுமை கட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். BSNLல் ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் மட்டுமே, விரைவில் இந்த நிறுவனத்தின் பொருளாதார புத்தாக்கத்தை உறுதி செய்ய முடியும். கடந்த ஓரிரு வாரங்களாக, BSNLல் உள்ள அனைத்து முக்கியமான அமைப்புகளும் இந்த திசைவழியில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவற்றின் விளைவாக மகத்தான ஒற்றுமை உருவாகி உள்ளது. தற்போது மேலும் பல அமைப்புகள் AUABயில் இணைந்துள்ளது. இது 11.10.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தில் பிரதிபலித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, SEWA BSNL, BSNL MS, AIBSNLOA, TEPU, BSNLATM, BSNL OA, TOA BSNL மற்றும் BEA ஆகிய 13 அமைப்புகள் பங்கு பெற்றுள்ளன. அன்றைய கூட்டத்தில் கலந்துக் கொள்ள இயலாத இதர சங்கங்களையும், AUABக்குள் கொண்டு வரும் நோக்கத்தோடு அணுகுவது என்றும் அந்தக் கூட்டம் முடிவு செய்துள்ளது. ஊழியர்களின் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை தொடருவோம்.

Monday 7 October 2019

07.10.2019 இன்று நடைபெறவுள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டம்.

அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டம் இன்று மாலை 03:00 மணிக்கு புதுடெல்லியின் அதுல் க்ரோவ் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் எம்எஸ் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் சம்பளம்  பி.எஸ்.என்.எல் புதுப்பித்தல் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்த செயல் திட்டம் குறித்து விவாதித்து முடிவெடுக்கும்.

BSNL provides 13.5 lakh new mobile connections in September, 2019:



பிஎஸ்என்எல் எதிர்கொள்ளும் அனைத்து பின்னடைவுகளையும் மீறி, நிறுவனம் 2019 செப்டம்பர் மாதத்தில் 13,54,090 இணைப்புகளை வழங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் வட்டம் அதன் இலக்கில் 159% ஐ அடைந்துள்ளது, அதே நேரத்தில் சென்னை வட்டம் 100% இலக்கை அடைந்துள்ளது. இந்த சாதனைக்கு எஸ்.என்.எல்.யு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது

Thursday 19 September 2019

சதிகளையும், துரோகங்களையும் மீறி BSNL ஊழியர் சங்கம் , 7ஆவது முறையாக தொடர் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக நடைபெற்றுள்ள தேர்தலில், 7வது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரலாற்று சாதனையை மீண்டும் ஒரு முறையை BSNL ஊழியர் சங்கம் படைத்துள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும், சதிகளையும் துரோகங்களையும் தாண்டி இந்த மகத்தான வெற்றியை நமது சங்கம் பெற்றுள்ளது. BSNL நிறுவனத்தையும், அதன் ஊழியர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் ஒரே சங்கம் BSNL ஊழியர் சங்கம் தான் என பெரும்பாலான ஊழியர்கள் நம்பிக்கை வைத்துள்ளதை இந்த வெற்றி பறை சாற்றுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக, BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய, மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளும், முன்னணி ஊழியர்களும், TNTCWU மற்றும் AIBDPA தலைவர்களும் கடுமையாக செய்திட்ட தேர்தல் பணிகளின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. அத்தனை தோழர்களையும் தமிழ் மாநில சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
அனைத்திற்கும் மேலாக நமது சங்கத்தின் தலைமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாக்களித்து வரும் அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராடுதல்களையும், நன்றிகளையும் உரித்தக்கிக் கொள்கிறது.



BSNLEU-க்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி!

அன்பார்ந்த தோழர்களே,
(16.09.2019) BSNLல் நடைபெற்ற 8வது உறுப்பினர் சரிபார்ப்பு  தேர்தலில் BSNLEU-க்கு வாக்களித்த அனைவருக்கும் BSNLEU வேலூர் மாவட்ட     சங்கம் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் உரித்தாக்கிக் கொள்கிறது.

தமிழகத்தில் நடைபெற்ற 8வது உறுப்பினர் சரிபார்ப்பு   தேர்தல் முடிவு :



SSA 8th MVP
Votes Polled votes NFTE BSNLEU
Coimbatore 781 747 286 420
Cuddalore 487 474 315 130
Dharmapuri 227 225 47 162
Erode 468 460 241 198
Karaikudi 276 273 171 29
Kumbakonam 280 271 192 62
Madurai 833 800 327 325
Nagercoil 251 238 55 151
Nilgiris 146 142 30 108
Puducherry 169 166 87 68
Salem 736 724 363 322
Thanjavur 398 395 311 60
Tirunelveli 428 409 219 156
Trichy 722 677 379 206
Tuticorin 230 224 72 115
Vellore 669 661 505 129
Virudhunagar 260 256 110 137
CGM (O) 265 245 128 53
TOTAL 7626 7387 3838 2831



ALL INDIA Final results of the 8th Membership Verification in BSNL.           << CLICK HERE >>


BSNL புத்தாக்க திட்டத்தினை நிதி அமைச்சகம் நிராகரிப்பு

ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொதுத்துறை நிறுவனமான BSNLஐ புத்தாக்கம் செய்வதற்கான திட்டத்தை நிதியமைச்சகம் நிராகரித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சரவை துணைக்குழு இந்த திட்டத்தை தயாரித்திருந்தது. இந்த திட்டத்திற்கான நிதியேதும் ஒதுக்க முடியாது என்பதை காரணம் காட்டி நிதியமைச்சகம் இதனை நிராகரித்துள்ளது.
புதிய ஒரு திட்டத்தை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அப்போதைய அமைச்சரவை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா அமைச்சரவையின் முன் வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின் அவர் நிதியமைச்சகத்திடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் நிருபேந்திர மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இந்த திட்டத்தை உருவாக்கிய குழுவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒருவர். எனினும், நிதியமைச்சகத்திடம் கொடுத்த பின்னர் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் அதிகப்படியான ஊழியர்கள் இருப்பதாக முடிவெடுக்கப்பட்டதின் அடிப்படையில், இந்த திட்டத்தில் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்க முடியாது என நிதியமைச்சகம், தெளிவாக தெரிவித்து விட்டது.
BSNLக்கு 4G அலைக்கற்றையினை வழங்குவதற்கான நிதியினையும், அரசாங்கம் வழங்க வேண்டும் என்பது மற்றுமொரு பரிந்துரை. எனினும், இதற்கும் நிதியமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதற்கான நிதியினை BSNL நிறுவனமே வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.
-16.09.2019 தேதியிட்ட மாத்ருபூமி இணைய தள பத்திரிக்கை செய்தி

Sunday 15 September 2019

வரிசை எண் 8ல் உள்ள செல்போன் சின்னத்திற்கு வாக்களிப்போம்!

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக போராடி BSNLஐ பாதுகாக்கும் சங்கம் BSNL ஊழியர் சங்கம்!
BSNL ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வரும் சங்கம் BSNL ஊழியர் சங்கம்!


நமக்கான சங்கமான BSNL ஊழியர் சங்கத்திற்கு ’வரிசை எண் 8’ல் உள்ள ”செல்போன்” சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம்!

Tuesday 10 September 2019


சென்னை தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம்

03.09.2019 அன்று சென்னை தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் தேர்தல் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.  << மேலும் படிக்க >>

Monday 2 September 2019

ஆகஸ்ட் மாத ஊதியத்தை உடனே வழங்கக் கோரி 03.09.2019 அன்று ஆர்ப்பாட்டம்

BSNLல் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை. எப்போதும் வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாமதப்படுத்தப்படுகிறது. 
BSNL ஊழியர்களை துன்புறுத்துவதற்கான சூழலை, இந்த அரசாங்கமும், DoTயும், BSNL நிர்வாகமும், ஒரு உள்நோக்கத்துடனேயே உருவாக்கிக் கொண்டு வருகின்றன. ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்வதை கட்டாயப்படுத்தும் சதியின் ஒரு பகுதி தான் இது என்பதை நாம் நம்புவதற்கு எல்லா காரணங்களும் உண்டு. எனவே, ஆகஸ்ட் மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி, 03.09.2019 அன்று நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. எனவே நமது  அனைத்து கிளைகளிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுகிறோம்.

Wednesday 14 August 2019

Wednesday 7 August 2019

07.08.2019 ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டங்கள் அகில இந்திய AUAB அறைகூவல்

1) BSNLன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு, 2000-மாவது ஆண்டில் மத்திய அமைச்சரவை கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்று.
அ) சேவைகளை பராமரிக்க தேவையான உதவிகளை உடனடியாக BSNLக்கு வழங்கு
ஆ) தனது முதலீட்டு செலவுகளுக்காக BSNL நிறுவனத்திற்கு மென் கடன் வழங்கு.
2) முதலீட்டு செலவினங்களுக்கு BSNL நிறுவனம் விதித்துள்ள ஒட்டு மொத்த தடையை நீக்கு. வருமானம் உறுதி செய்யப்பட்டுள்ள இடங்களில் முதலீட்டு செலவினங்களை செய்ய தலமட்ட நிர்வாகங்களுக்கு அனுமதி கொடு.
3) ஆட்குறைப்பை செய்யாதே. BSNL உருவாகும் போது பணிப்பாதுகாப்பு தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்று.
4) சட்ட பூர்வ தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு கூட அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்வதை கைவிடு. 
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 07.08.2019 அன்று நாடு தழுவிய அளவில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமும் வாயிற்கூட்டமும் நடத்த AUAB அறைகூவல் விடுத்துள்ளது
வெற்றிகரமாக்குவோம். 
வரலாற்று சிறப்பு மிக்க விரிவடைந்த மத்திய செயற்குழு-பூனே :  

<< மேலும் படிக்க >>  

ஒப்பந்த ஊழியர்களுக்கு 7 மாத காலம் ஊதியம் தராத பிரச்சனைக்காக 13.08.2019 அன்று தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் நோக்கிய பேரணி :

பூனே நகரத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு, கடந்த ஏழு மாத காலமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தராத பிரச்சனையை விவாதித்தது. BSNL ஊழியர் சங்கம், BSNL CCWF உடன் இணைந்து 16.07.2019 அன்று கார்ப்பரேட் அலுவலகம் துவங்கி அனைத்து மாவட்ட/ மாநில தலைநகர்களிலும் தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளது. எனினும் இந்த பிரச்சனையில் தீர்வு காணப்படவில்லை. எனவே விரிவடைந்த மத்திய செயற்குழு, ALC/RLC/Dy.LC அலுவலகங்களை நோக்கி பேரணி நடத்துவது என்று முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்தை 13.08.2019 அன்று நடத்துவது என BSNL ஊழியர் சங்கமும் BSNL CCWFம் இணைந்து முடிவு செய்துள்ளன. இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்கிட மாநில/ மாவட்ட சங்கங்கள் திட்டமிட வேண்டும். எந்த நகரத்தில் தொழிலாளர் நல அலுவலகங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டும். அங்குள்ள அதிகாரிகளிடம், ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய நிலுவை பிரச்சனையில் தலையிட வேண்டுமென கேட்டு மனு ஒன்றையும் நமது சங்கங்கள் வழங்க வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில மட்டங்களில் இருந்து ஒப்பந்த ஊழியர் பிரச்சனையை அகில இந்திய பிரச்சனையாக எடுத்துள்ள மத்திய சங்கத்தை வாழ்த்துவதோடு, இந்த இயக்கங்களை புத்துணர்ச்சியோடு பெரிய அளவிலான தோழர்களை பங்கேற்க செய்து வெற்றிகரமாக்கிட வேண்டுமென தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.