Tuesday, 19 February 2019

முதல் நாள் வேலை நிறுத்தம் பிரமாண்டமான வெற்றி - பங்கேற்ற அனைவருக்கும் AUAB தனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது

முதல் நாள் வேலை நிறுத்தத்தை பிரமாண்டமாக வெற்றியடையச் செய்த அனைத்து ஊழியர்களையும் அதிகாரிகளையும் AUAB மனதார பாராட்டுகிறது. 18.02.2019 அன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற அகில இந்திய AUAB கூட்டத்தில் முதல் நாள் வேலை நிறுத்தம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது. AUABயில் உள்ள சங்கங்களின் பொது செயலாளர்களும், மூத்த தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். மாநிலங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றுள்ளது. இந்த வேலை நிறுத்தம் மிகவும் அமைதியாகவும் நடைபெற்றுள்ளது என்பதையும் AUAB பதிவு செய்துள்ளது. முதல் நாள் மாலையில் PRESS INFORMATION BUREAUவிற்கு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக AUABயிடம் விவாதிக்கப்பட்டு வருவதாக ஒரு புறம் அறிக்கை ஒன்றை DoT கொடுத்துள்ளது. ஆனால் மறு புறத்தில், முதல் நாள் வேலை நிறுத்தத்தில் பெருவாரியாக ஊழியர்கள் பங்கேற்ற பின்னரும், AUAB தலைவர்களை DoT பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. இது DoTயின் இரட்டை நாக்கை வெளிக்காட்டுகிறது. இந்த சூழ்நிலையில் 18.02.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்கள் வேலை நிறுத்தத்தை 100 சதவிகிதம் வெற்றி பெறச் செய்யும் வகையில் வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்த வேண்டும் என அறைகூவல் விடப்பட்டுள்ளது.