Friday 25 January 2019

BSNLன் தங்க சுரங்கத்தை திறக்கவும்

BSNL பெருத்த நஷ்டத்தில் செயல்படுவதால், அந்த நிறுவனத்திற்கு தனது ஊழியர்களுக்கு 15% ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய மாற்றப்பட்ட ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்க இயலாது என DOTயும் மத்திய அமைச்சரும் தெரிவித்து வருகின்றனர். ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்றத்தை மறுப்பதற்காகவே BSNLன் நெருக்கடியான பொருளாதார நிலை பற்றி DOT பேசுகிறது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். BSNLன் நிதியாதாரத்தை பலப்படுத்தவும், BSNLன் புத்தாக்கத்திற்காகவும், எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை. BSNLன் பொருளாதார நிலையை மேம்படுத்த பெரும் பங்காற்றக் கூடிய 4G அலைக்கற்றையை BSNLக்கு வழங்க அரசாங்கம் விரும்பாததே இதற்கு மிகச்சிறந்த உதாரணம். ’BSNLன் தங்க சுரங்க’த்தை BSNL பயன்படுத்த அரசாங்கம் அனுமதிக்கவில்லை. ஆம்; நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் பெரு நகரங்களின் மையப்பகுதிகளில் BSNLக்கு சொந்தமான நிலங்கள் பரவலாக உள்ளன. அந்த நிலங்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் வரை வரும். இதன் மூலம் BSNL சர்வ சாதரணமாக வருடத்திற்கு 10,000 கோடி ரூபாய்களை வருவாய் ஈட்ட முடியும். ஆனால் இதற்கு DOT ஒப்புதல் தரமறுக்கிறது. 29.10.2018 அன்று தொலை தொடர்பு துறையின் செயலாளருக்கு தனது ’நில மேலாண்மை கொள்கை’க்கு ஒப்புதல் தரவேண்டும் என்று BSNL கேட்டுக் கொண்டு ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்த கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால், தனது நிலங்களின் மூலமாக BSNL அதிகப்படியான வருவாயை ஈட்ட முடியும். ஆனால் இதுவரை DOT, BSNLன் நில மேலாண்மை கொள்கைக்கு ஒப்புதல் வழங்கவில்லை. 22.01.2019 அன்று நமது பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS ஆகியோர் திரு அபய் குமார் CGM(BW) அவர்களையும், திரு D.K.சிங்கால் GM(LD) அவர்களையும் சந்தித்து இது தொடர்பாக நீண்டதொரு விவாதம் நடத்தினர். ‘BSNLன் தங்கசுரங்கத்தை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக நமது தலைவர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.