Friday 25 January 2019

7100 ரூபாய் ஊதிய விகிதம்

Sr.TOAக்களின் ஊதிய விகிதத்தை 7100லிருந்து 6550ஆக குறைத்த பிரச்சனையை BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து எடுத்து வருகிறது. 10.07.2018 அன்று CMD BSNL உடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண அவர் ஏற்றுக் கொண்டார். அதற்கு பின் மனித வள இயக்குனர், Sr.GM(Estt) உள்ளிட்டவர்களோடு தொடர்ச்சியான சந்திப்புகள் நடைபெற்றது. NEPP திட்டத்தின் அடிப்படையில் புதிதாக விருப்பம் தெரிவிக்க மற்றுமொரு வாய்ப்பு கொடுப்பது என மைசூரு அகில இந்திய மாநாட்டிற்கு முன் BSNL ஊழியர் சங்கத்திற்கும் Sr.GM(Estt)க்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இந்த வாய்ப்பின் காரணமாக முன்னர் தவறுதலாக ஒருவர் கொடுத்த விருப்பத்தினால் குறைக்கப்பட்ட அவரின் ஊதிய விகிதம் சரி செய்யப்படும். ஆனால் கார்ப்பரேட் அலுவலகத்தின் ESTABLISHMENT பிரிவு அதற்கான கடிதம் வெளியிடுவதில் தேவையற்ற கால தாமதத்தை செய்து வருகின்றது. 21.01.2019 அன்று நமது பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS ஆகியோர் திரு சௌரப் தியாகி Sr.GM(Estt) அவர்களை சந்தித்து இந்த தேவையற்ற காலதாமத்தின் மீதான தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர். அப்போது, புதிய விருப்பம் கோருவதால், ஓய்வு பெற்றவர்கள் தொடர்பான எழும் பிரச்சனைகள் தொடர்பாக பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார். இதன் மீது வேகமாக முடிவெடுக்கப்பட்டு, ஏற்றுக் கொண்டபடி உடனடியாக அதற்கான கடிதம் வெளியிட வேண்டும் என நமது தலைவர்கள் கேட்டுக் கொண்டதுடன், இந்த பிரச்சனையில் மனித வள இயக்குனர் தலையிட வேண்டுமென அவருக்கு ஒரு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளனர்.