குழந்தைகள் நல விடுப்பு தொடர்பான பல விளக்கங்கள் மற்றும் உத்தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதனை BSNLல் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இந்த பிரச்சனையை BSNLEU மத்திய சங்கம் தொடர்ந்து கையில் எடுத்து நிர்வாகத்துடன் விவாதித்து வந்தது. இறுதியாக 19.06.2018 அன்று GM(Estt) திரு சௌரப் தியாகி அவர்களிடம் நமதுபொது செயலாளர் தோழர் P.அபிமன்யு விவாதித்த போது, இது தொடர்பான அனைத்து அரசு உத்தரவுகளும் தன்னிச்சையாக BSNLக்கு பொருந்தும்படியான உத்தரவை வெளியிடுவதாக உறுதி அளித்திருந்தார். அவர் உறுதி அளித்த படி அதற்கான கடிதத்தை கார்ப்பரேட் அலுவலகம் 26.06.2018 அன்று வெளியிட்டுள்ளது << மேலும் படிக்க >>