19.06.2019 AUAB கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், 3வது ஊதிய மாற்றத்திற்காகவும், நமது BSNLன் புத்தாக்கம் தொடர்புடைய இதர கோரிக்கைகளுக்காகவும், நாம் கடைபிடிக்க வேண்டிய தந்திரோபயங்களை விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது. தற்போது நமது நிறுவனம் சந்தித்துக் கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பாக தனி கவனத்துடன் இந்தக் கூட்டம் விவாதித்து நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்கும்.