இன்று (12.04.2019) அன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மனிதவள இயக்குனர் அவர்கள் 11.04.2019 அன்று தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்டார்.
BSNLEU, NFTE, AIBSNLEA, BSNLMS மற்றும் BSNLOA ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். நமது சங்கத்தின் சார்பாக தோழர் சுவபன் சக்கரவர்த்தி (Dy.GS) கலந்துக் கொண்டார்.
பங்கேற்ற தலைவர்களிடம் நமது ஆர்ப்பாட்ட அறைகூவலை விலக்கிக் கொள்ளவேண்டுமென மனிதவள இயக்குனர் கேட்டுக் கொண்டார். எனினும் தலைவர்கள் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் திட்டமிட்டுள்ளபடி ஆர்ப்பாட்டத்தை சக்தியாக நடத்துவோம்.