Friday, 8 March 2019

மார்ச்- 8 சர்வதேச பெண்கள் தினம் - பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக வலுவாக குரல் கொடுக்கும் வகையில் கடைபிடிப்போம்.

மார்ச்-8 சர்வதேச பெண்கள் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் நமது மாநிலத்தில் பல மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தை மிகச்சிறப்பாக கொண்டாட மாவட்ட சங்கங்கள் திட்டமிட வேண்டுகிறோம். கொண்டாட்டம், கூதுகலம் என்று மட்டுமல்லாமல், இந்த சமூகத்தில் பெண்களுக்கான சம உரிமை மறுக்கப்படுவதை உரத்து பேசி சுட்டிக்காட்டப்பட வேண்டும். நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சுகாதாரம், பொருளாதர வளங்களின் மீதான உரிமை, பாலின பாகுபாடு, பத்தாம்பசலித்தனமான நடவடிக்கைகள், உடல் ரீதியான, மன ரீதியான வன்முறைகள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட விஷயங்களில் உலகிலேயே இந்தியா தான் மிக பயங்கரமான நாடு என 19.06.2018 அன்று தாம்சன் ரூட்டர்ஸ் ஃபௌண்டேஷன் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. பெண்களுக்கு எதிரான இத்தகைய அனைத்து வன்முறைகளுக்கும் எதிராக உழைக்கும் வர்க்கம் எதிர்த்து போராட வேண்டும். அந்த திசைவழியில் இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தை மாவட்ட சங்கங்கள் கொண்டாட வேண்டும் என தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.