Wednesday, 22 August 2018

புதிய ஊதிய விகித முன்மொழிவை BSNL ஊழியர் சங்கமும், NFTEயும் இணைந்து நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது

ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை விரைவாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க ஒன்று பட்டு செயல்படுவது என BSNL ஊழியர் சங்கமும் NFTEயும் ஏற்கனவே முடிவெடுத்துள்ளன. 02.08.2018 அன்று ஊதிய மாற்றக்குழுவில் உள்ள BSNLEU மற்றும் NFTE சங்க உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம் கூடிய போது நீண்ட விவாதங்கள் நடைபெற்று, இறுதியாக புதிய ஊதிய விகிதங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதில் ஒரு ஒன்றுபட்ட முடிவு எட்டப்பட்டது. மேலும் 09.08.2018 அன்று ஊதிய மாற்றக்குழு கூடுவதற்கு முன்பாகவே நிர்வாகத்திற்கு இது தொடர்பான ஒரு குறிப்பை கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 08.08.2018 அன்று ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் அவர்களுக்கு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.