Wednesday, 22 August 2018

ஊதிய மாற்றத்திற்கான இணைந்த குழுவின் இரண்டாவது கூட்டம்

BSNL ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைந்த குழுவின் கூட்டம் 09.08.2018 அன்று அதன் தலைவர் திரு H.C.பந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. புதிய ஊதிய விகிதத்தின் முன்மொழிவை ஊழியர் தரப்பு ஏற்கனவே நிர்வாகத்திடம் வழங்கிவிட்டது. ஊழியர் தரப்பில் கொடுக்கப்பட்ட குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது. இந்த முன் மொழிவுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது தொடர்பாக ஊழியர் தரப்பில் விளக்கப்பட்டது. நிர்வாக தரப்பு எந்த ஒரு முன்மொழிவையும் கொண்டு வரவில்லை. நிர்வாக தரப்பில் இதற்காக உருவாக்கப்பட்ட துணைக்குழு அந்த பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர். இந்த இணைந்த குழு தனது பணிகளை இன்னமும் வேகமாக செய்யவில்லை என்றால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஊதிய மாற்றத்தை இறுதி செய்வது சிரமமாகிவிடும் என ஊழியர் தரப்பு, நிர்வாகத்திடம் தெரிவித்தது. இந்தக் குழுவின் அடுத்தக் கூட்டம் 27.08.2018 அன்று நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.