இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கவும், e-visa முறையினை ஊக்குவிக்கவும் e-visaவுடன் கூடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக BSNL சிம்கார்ட்களை மத்திய சுற்றுலாத்துறை வழங்குகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவில் தொடர்பு கொள்ள சுற்றுலாத் துறை அமைச்சர் மஹேஷ் சர்மா இந்த திட்டத்தை 15.02.2017 அன்று துவக்கி வைத்தார். வெளி நாட்டு பயணிகள் இந்தியா வந்தவுடன் பேசுவதற்காக 50 ரூபாயும், 50 MB டேட்டாவும் கொண்ட இலவச BSNL சிம்கார்ட்களை அரசாங்கம் வழங்கும்.