Tuesday 5 March 2019

தோழர் P.அபிமன்யு அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு TUI of Transport and Communication அமைப்பின் Communication பிரிவிற்கு ஒருங்கிணைப்பாளராக ஏக மனதாக தேர்வு .

அன்பார்ந்த தோழர்களே, 2019 மார்ச் 1மற்றும் 2ஆம் தேதிகளில் இஸ்தான்புல்லில் நடைபெற்ற TRADE UNION INTERNATIONAL OF TRANSPORT AND COMMUNICATIONS ந் 14வது மாநாட்டில் சிலி நாட்டின் தோழர் ரிக்கார்டோ தலைவராகவும், துருக்கியின் தோழர் அலி ரிசா பொதுச் செயலாளாராகவும் உள்ளிட்ட 23 தோழர்கள் அடங்கிய செயலகம் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நமது BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் COMMUNICATION பிரிவின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோழர் P.அபிமன்யு அவர்களுக்கு தமிழ் மாநில சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.