Monday, 18 March 2019

வரலாற்று மிக்க சஞ்சார் பவன் நோக்கிய பெருந்திரள் பேரணியில் முழுமையாக பங்கேற்போம்.

மத்திய அரசின் BSNL விரோத கொள்கைகளுக்கு எதிராக 2019, ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி புது டெல்லியில் சஞ்சார் பவனை நோக்கிய பெருந்திரள் பேரணியை நடத்துவது என அகில இந்திய AUAB முடிவெடுத்துள்ளது. இந்த பேரணியின் இறுதியில் அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் உரையாற்ற உள்ளனர். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பேரணியாய் மாற்றுவது என்பது BSNLன் இருத்தலுக்கும், வளர்ச்சிக்கும் அதி முக்கியமானது. எனவே இதில் பெரும்பான்மையான ஊழியர்களை திரட்ட வேண்டிய அவசியம் உள்ளது என நமது மத்திய சங்கம் அறிவுறுத்தி உள்ளது. எனவே இந்த பேரணியில் பெரும்பான்மையாக ஊழியர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என தமிழ் மாநில மையம் விவாதித்து தமிழ் மாநில சங்க நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் கண்டிப்பாக இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும் என்றும் அது தவிர மாவட்டங்களில் இருந்து கீழ்கண்ட எண்ணிக்கையில் ஊழியர்களை திரட்டுவது என முடிவு செய்துள்ளது. 

கோவை- 30, கடலூர்-15, தர்மபுரி—15, ஈரோடு-20, காரைக்குடி-02, கும்பகோணம்-05, மதுரை-20, நாகர்கோவில்-15, நீலகிரி-10, பாண்டிச்சேரி-10, சேலம்-20, தஞ்சாவூர்-03, திருச்சி-15, திருநெல்வேலி-15, தூத்துக்குடி-10, விருதுநகர்-15, வேலூர்-15, CGM(O)-10 மற்றும் CGM(P)-05 தோழர்கள்.