Friday, 8 March 2019

ஊதியம் தராதது மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள்- கார்ப்பரேட் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க AUAB முடிவு

07.03.2019 அன்று நடைபெற்ற AUABயின் அவசரக் கூட்டத்தில் BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, AIGETOA, TEPU, BSNL MS, BSNLOA சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் பங்கேற்றனர். கீழ்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன:

BSNL ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் தராதது.
AUAB தலைவர்கள், குறிப்பாக அதிகாரிகள் சங்கங்களின் தலைவர்கள் மீதான பழி வாங்கல் நடவடிக்கைகள்.
AUABயின் கோரிக்கை மனுவில் உள்ள பிரச்சனைகள்.

மேற்கண்ட பிரச்சனைகள் மீது நீண்ட விவாதங்கள் நடைபெற்று, கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன.

1) பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்படாதது மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக இந்தக் கூட்டம் முடிந்தவுடன் BSNL CMD அவர்களை சந்திப்பது.
2) 2019 மார்ச் 12 முதல் கார்ப்பரேட் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்வது.
3) பிரச்சனைகள் தீராவிட்டால் மாவட்ட, மாநில மட்டங்களில் உண்ணாவிரதம் மேற்கொள்வது.
4) பிரதமர் அலுவலகம் நோக்கிய பேரணியை ஏப்ரல் மாதத்தில் நடத்துவது.

அகில இந்திய AUABயின் முடிவுகளை முழுமையாக அமலாக்குவோம்.