மார்ச் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் AUAB கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஊழியர்களுக்கு இன்னமும் ஊதியம் தராமல் இருப்பது மற்றும் BSNL சேவையின் தரங்கள் குறைவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. 14ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு, குறிப்பாக DoTயின் BSNL விரோதா கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. மாவட்ட மாநில செயலாளர்களுக்காக AUABயின் முடிவுகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. முடிவுகளை கறாராக அமல்படுத்த வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.