Friday 15 February 2019

BSNLஐ மூடிவிடு? பூனைக்குட்டி இறுதியாக பையை விட்டு வெளியே வந்து விட்டது- 3நாட்கள் வேலை நிறுத்தத்தை l மூலம் பதிலடி கொடுப்போம்!

BSNLஐ அரசு எவ்வாறு நடத்துகிறது என்பது தொடர்பான விஷயங்கள் இன்றைய Times of India பத்திரிக்கையில் வெளி வந்துள்ளன. அதில் BSNLநிறுவனத்தை மூடுவது என்பதும் அரசு பரிசீலித்து வரும் விஷயங்களில் ஒன்று என்பதாகும். அரசாங்கம் வேறு ஒரு திட்டத்தையும் வைத்துள்ளது. BSNLஇன் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை ஏதாவது ஒரு கார்ப்பரேட் முதலாளிக்கு கொடுத்து விட்டு அவரை BSNLஇன் பங்குதாரராக சேர்த்துக்கொள்வது. இது தான் கேந்திர பங்கு விற்பனை. ஆக இறுதியில் பையை விட்டு பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. BSNLஐ மூடிவிடுவது அல்லது கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது என்கிற தனது திட்டத்தை அரசு வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. BSNL ஊழியர்களாகிய நாம் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. தோழர்களே, நாம் சரணடைந்து விடக் கூடாது. கடந்த 18 ஆண்டுகளாக நாம் போராடி BSNL நிறுவனத்தை அரசாங்கத்தின் 100% நிறுவனமாகவே பாதுகாத்துள்ளோம். BSNLஐ பாதுகாக்கும் நமது போராட்டத்தை தொடர வேண்டும். 18.02.19 முதல் நடைபெற உள்ள 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் பெருவாரியாக பங்கேற்று வெற்றி பெற செய்வோம். BSNL நிறுவனத்தை அரசாங்கம் சீரழிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட மாட்டோம் என்பதை அரசுக்கு புரிய வைப்போம். BSNL நிறுவனத்தை சீரழிக்கும் அரசின் சித்து விளையாட்டுக்கு எதிராக நமது சக்தியை முழுமையாக திரட்டி போரிடுவோம்.