Monday 14 January 2019

01.01.2007 முதல் 07.05.2010 வரை பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் ஊதியக் குறைப்பு பிரச்சனைக்கு தீர்வு- BSNL ஊழியர் சங்கத்தின் கடும் முயற்சிக்கு கிடைத்த பலன்.

இரண்டாவது ஊதிய மாற்றக் குழு பரிந்துரையை அமலாக்கிய பின், 01.01.2007 முதல் 07.05.2010 வரை பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு வாங்கி வந்த ஊதியத்தை விட குறைவான ஊதியமே கிடைத்தது. BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக இந்த பிரச்சனையை கையில் எடுத்தது. இறுதியாக, ஊதிய இழப்பை சந்தித்த நேரடி நியமன TTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வு தொகை வழங்கப்பட்டது. ஆனால் இதர ஊழியர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த பாரபட்சத்தை நிர்வாகத்திடம் BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக விவாதித்தது. நமது தொடர் முயற்சியின் காரணமாக நிர்வாகக் குழு இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு BSNL இயக்குனர் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் இயக்குனர் குழு இதற்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தக் கோரிக்கையின் தீர்விற்காக BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்தை நெருக்கியது. இறுதியாக 10.07.2018 அன்று BSNL CMDயிடம் நடைபெற்ற சந்திப்பில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. அந்த விவாதத்தில், இந்த பிரச்சனை தொடர்பாக மற்றுமொரு முறை இயக்குனர் குழுவின் ஒப்புதலை கோருவதாக உறுதி அளித்தார். அதன் காரணமாக இந்த பிரச்சனை மீண்டும் இயக்குனர் குழுவிற்கு சென்றது. இறுதியாக, இதர ஊழியர்களுக்கும், குறைக்கப்பட்ட அவர்களது ஊதியத்தை ஈடுகட்டுவதற்கான ஒப்புதலை BSNL இயக்குனர் குழு வழங்கியது. அதன் அடிப்படையில் கார்ப்பரேட் அலுவலகம் 08.01.2019 அன்று உத்தரவையும் வெளியிட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் படி, ஊதியத்தில் உண்மையில் குறைக்கப்பட்ட தொகை ஈடுகட்டப்படும். அந்த தொகை எதிர்கால ஆண்டு ஊதிய உயர்வு தொகைகளில் சமப்படுத்தப்பட மாட்டாது. இதற்கான நிலுவைத் தொகையையும் ஊழியர்கள் பெறுவார்கள். இந்த பலனை அனுபவிக்க போகும் அனைத்து ஊழியர்களுக்கும் BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட BSNL CMDக்கும் தனது நன்றிகளை உரித்தாக்குகிறது.