Wednesday 28 November 2018

மனித வள இயக்குனருடன் முறையான சந்திப்பிற்கு வேண்டுகோள்

JE இலாகா தேர்வினை ONLINE முறைக்கு பதிலாக OFF LINE முறையில் நடத்த வேண்டும், 28.01.2018 அன்று நடைபெற்ற JE இலாகா தேர்வில் பங்கு பெற்ற ST ஊழியர்களுக்கு மதிப்பெண்களில் மேலும் தளர்வு தர வேண்டும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்கிற தகுதி இல்லாத RM தோழர்களுக்கு TT இலாகா தேர்வு எழுத ஒரு கட்ட தளர்வு வழங்க வேண்டும், Sr.TOAக்களின் ஊதிய விகிதம் 7100லிருந்து 6550ஆக குறைக்கப்பட்டதற்கு தீர்வு காண்பது மற்றும் JTO (சிவில்/எலெக்ட்ரிகல்) க்களான 50% காலிப்பணியிடங்களை ட்ராஃப்ட்ஸ்மேன் (சிவில்/எலக்ட்ரிகல்) கேடர்கள் மூலமாக நிரப்புவதற்கான சிறப்பு இலாகா தேர்வினை நடத்துவது ஆகியவை தொடர்பாக விவாதிக்க DIRECTOR(HR) அவர்களிடம் ஒரு முறையான சந்திப்பிற்கு (FORMAL MEETING) நேரம் ஒதுக்குமாறு BSNL ஊழியர் சங்கம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.