டிசம்பர் 12, 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அனைத்து சங்கங்களின் கிளை மட்டம் முதல் அகில இந்திய மட்டம் வரையில் உள்ள தலைவர்கள் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட கடுமையான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்ற உணர்வோடு நமது ஊழியர்களும் அதிகாரிகளும் இதுவரை இல்லாத அளவில் இந்த போராட்டத்திற்கு தங்களின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டி வருகின்றனர். அகில இந்திய அளவிலும் மாநில மட்டத்திலும், ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று நள்ளிரவு 00.00 மணி முதல் நாளை மறு நாள் நள்ளிரவு 24.00 வரை வேலை நிறுத்தம் நடைபெற வேண்டும். கிளை மற்றும் மாவட்ட மட்டங்களில் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கான இறுதி கட்ட முயற்சிகளில் விழிப்புடன் செயல்பட வேண்டும். நமது நியாயமான உரிமையான 01.01.2017 முதல் ஊதிய மாற்றத்தை பெற்றிடவும், நமது கடமையான BSNL நிறுவனத்தை காப்பதற்காக துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்திடவும் இந்த வேலை நிறுத்தத்தினை முழு வெற்றி பெறச் செய்திடுவோம்.
போராட்ட வாழ்த்துக்கள்.