அன்பார்ந்த தோழர்களே மத்திய மாநில சங்கங்களின் முடிவின்படி 18. 4 .2020 சனிக்கிழமை அன்று BSNLEU மற்றும் AIBDPA இரண்டு மாவட்ட சங்கங்கள் இணைந்து வேலூர் பகுதியில் உள்ள நமது ஒவ்வொரு ஒப்பந்த ஊழியருக்கும் ரூபாய் 1600 மதிப்புள்ள 25 கிலோ அரிசி மற்றும் 12 வகையான மளிகைப் பொருட்கள் வேலூர் BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில் 52 ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தோழர் B.ஜோதி சுதந்திர நாதன் மாவட்ட செயலாளர் , AIBDPA தோழர் எம் சதீஷ் குமார்மாவட்ட செயலாளர் TNTCWU, தோழர் C. ஞானசேகரன் மாநில உதவி செயலாளர் AIBDPA , தோழர் J. திருஞானசம்பந்தம் மாநில அமைப்பு செயலாளர் AIBDPA மற்றும் BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.