நரேந்திர மோடி அரசாங்கம் அமலாக்கி வரும் கார்ப்பரேட் ஆதரவு, தொழிலாளர் விரோத, நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக, இந்திய தொழிலாளி வர்க்கம் 2020, ஜனவரி 8ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்துகிறது. இந்திய தொழிலாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்கும் BSNL ஊழியர் சங்கமும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறது. பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவது, தேசத்தின் சொத்துக்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது, முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றுவது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 3வது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளின் தீர்வையும், BSNL ஊழியர் சங்கம் கோரியுள்ளது. கிளை, மாவட்ட சங்கங்கள், இந்த வேலை நிறுத்தத்தை மிகப்பெரும் வெற்றி பெறச்செய்திட வேண்டும்.