பூனே நகரத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு, கடந்த ஏழு மாத காலமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தராத பிரச்சனையை விவாதித்தது. BSNL ஊழியர் சங்கம், BSNL CCWF உடன் இணைந்து 16.07.2019 அன்று கார்ப்பரேட் அலுவலகம் துவங்கி அனைத்து மாவட்ட/ மாநில தலைநகர்களிலும் தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளது. எனினும் இந்த பிரச்சனையில் தீர்வு காணப்படவில்லை. எனவே விரிவடைந்த மத்திய செயற்குழு, ALC/RLC/Dy.LC அலுவலகங்களை நோக்கி பேரணி நடத்துவது என்று முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்தை 13.08.2019 அன்று நடத்துவது என BSNL ஊழியர் சங்கமும் BSNL CCWFம் இணைந்து முடிவு செய்துள்ளன. இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்கிட மாநில/ மாவட்ட சங்கங்கள் திட்டமிட வேண்டும். எந்த நகரத்தில் தொழிலாளர் நல அலுவலகங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டும். அங்குள்ள அதிகாரிகளிடம், ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய நிலுவை பிரச்சனையில் தலையிட வேண்டுமென கேட்டு மனு ஒன்றையும் நமது சங்கங்கள் வழங்க வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில மட்டங்களில் இருந்து ஒப்பந்த ஊழியர் பிரச்சனையை அகில இந்திய பிரச்சனையாக எடுத்துள்ள மத்திய சங்கத்தை வாழ்த்துவதோடு, இந்த இயக்கங்களை புத்துணர்ச்சியோடு பெரிய அளவிலான தோழர்களை பங்கேற்க செய்து வெற்றிகரமாக்கிட வேண்டுமென தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.