அன்பார்ந்த தோழர்களே, தமிழகத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாத காலத்திற்கு மேல் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக பல கட்ட போராட்டங்களை நடத்திய பின்னும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் கிடைக்கவில்லை. பல கட்ட பேச்சு வார்த்தைகள் எந்த பயனும் கிடைக்காத சூழலில் நாம் இதுவரை பொறுத்து வந்ததிற்கு பயன் ஏதும் இல்லாதது போல உணர்ந்தோம். ஒப்பந்த ஊழியர்களின் சிரமங்களையும் புரிந்துக் கொண்ட நமது மாநில சங்கங்கள் (BSNL ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்) தொழிலாளர் நலத்துறைக்கு கடிதம் ஒன்றும் எழுதின. ஆனாலும் ஊதியம் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் நமது இரு மாநில சங்கங்களும் 01.04.2019 முதல் ”காத்திருப்புப் போராட்ட”த்திற்கு அறைகூவல் விடுத்தன. 01.04.2019 அன்று காலை முதல் சென்னை தலைமை பொதுமேலாளர் அலுவலகம் துவங்கி நாகர்கோவில் வரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் துவங்கியது. காலை 11 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்த மாநில நிர்வாகம், கேபிள் பணிகளுக்கு மட்டும் சுமார் 4.25 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாக தெரிவித்து நமது போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டது. ஆனாலும் நாம் ஏற்க வில்லை போராட்டம் தொடர்ந்தது. மாலையில் மேலும் சுமார் 5 கோடி ரூபாய்களை சேர்த்து மறு நாள் ஒப்பந்த ஊழியர் ஊதியத்திற்காக 9 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என மாநில நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. இது நமது முழுமையான தேவையை பூர்த்தி செய்யாது. எனினும் இன்றுள்ள சூழ்நிலையில் இது மிக பெரிய வெற்றி. இந்த வெற்றி நமது போராட்டத்தால் கிடைத்த வெற்றி. பெற்ற வெற்றியை பாதுகாப்போம். முன்னேற்றத்திற்காக போராடுவோம். போராட்டத்தை தற்போதைக்கு ஒத்திவைப்போம். அடுத்த வாரத்தில் வரும் முன்னேற்றங்களை வைத்து திட்டமிடுவோம்.
இதற்கிடையில் நமது பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் BSNL CMD அவர்களை சந்தித்து பல மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவர்க்ள் படும் சிரமத்தை எடுத்துரைத்தார். ஒப்பந்த ஊழியர்களுக்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக BSNL CMD தெரிவித்துள்ளார். இது தொடர்பான விவரங்களை நமது மத்திய சங்கம் கேட்டுள்ளது. மாவட்டங்களில் இருந்து மாநிலத்திற்கு அனுப்பியுள்ள விவரங்களை மாவட்ட சங்கங்கள் உடனடியாக மாநில சங்கத்திற்கு ‘WHATSAPP’ செய்தி மூலமாக அனுப்பி வைக்கவும்.
01.04.2019 அன்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் BSNLஊழியர் சங்கத்தின் வாழ்த்துக்கள்