Friday, 8 March 2019

ஊழியர்கள்- அதிகாரிகள் ஒற்றுமையை சீர்குலைக்க, கார்ப்பரேட் அலுவலகம் ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்குகிறது- ஒற்றுமையை பாதுகாக்க AUAB பொருத்தமான முடிவு மேற்கொள்ளும்.

BSNLல் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைந்து BSNL நிறுவனம் லாபத்துடன் செயல்பட, ‘வாடிக்கையாளர் மகிழ்விப்பு வருடம்’, ‘புன்முறுவலுடன் கூடிய சேவை’, ‘உங்கள் வாயிற்படியில் BSNL’ உள்ளிட்ட பல இயக்கங்களை நடத்தியுள்ளன. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இத்தகைய கூட்டு முயற்சிகளின் காரணமாகவே BSNL, இன்றும் நீடித்து வருகின்றது. எனினும், அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் ஒன்றாக இணைந்து ஒன்று பட்ட போராட்டங்களை நடத்தக்கூடாது என்கிற நிலையினை கார்ப்பரேட் நிர்வாகம் எடுக்கிறது. சமீபத்திய மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்திற்காக, அதிகாரிகள் சங்கங்களின் தலைவர்கள் மீது கார்ப்பரேட் அலுவலகம் ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. அவர்களுக்கு விளக்கம் கோரும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான ஒற்றுமையை உடைப்பதற்காக நிர்வாகம் எடுத்துள்ள ஆத்திரமூட்டும் நடவடிக்கையே தவிர வேறு ஏதும் இல்லை. அதிகாரிகள் சங்கங்களின் தலைவர்களை பழிவாங்கும் கார்ப்பரேட் அலுவலகத்தின் இத்தகைய நடவடிக்கைகளை நாம் அனுமதிக்க முடியாது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒற்றுமையை கார்ப்பரேட் அலுவலகம் உடைப்பதையும் நாம் அனுமதிக்க முடியாது. 07.03.2019 அன்று நடைபெற உள்ள AUAB கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து, கார்ப்பரேட் அலுவலகத்தின் இந்த மேதாவித்தனமான நடவடிக்கைகளை சந்திக்க பொருத்தமான இயக்கங்கள் முடிவு செய்யப்படும் என மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.