BSNL நிறுவனத்தை காப்பாற்றுவதற்காகவும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் மூன்றாம்நாள் வேலை நிறுத்தம் நாடு முழுவதும் எழுச்சியுடன் தொடர்கிறது . வேலூரில் மொத்தமுள்ள ஊழியர்களின் 95%க்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக வேலூரில் 99%க்கும் அதிகமான வாடிக்கையாளர் சேவை மையங்களூம், தொலைபேசி நிலையங்களும், அலுவலகங்களூம் மூடப்பட்டன . முதன்மை பொது மேலாளர் அலுவலகம் மற்றும் அனைத்து கிளை அலுவலகம்முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் தொய்வின்றி இன்னமும் அதிக வேகத்தில் நடைபெற உறுதியுடன் செயல்படுவோம். நமது கோரிக்கைகளை வென்றடைவோம்.





