கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படாததால், தல மட்டங்களில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின் கட்டணங்கள் செலுத்தப்படாததால் தொலை பேசி நிலையங்கள் மற்றும் டவர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. மருத்துவ பில்கள் பட்டுவாடா செய்யப்படவில்லை. வங்கிக்கும், கூட்டுறவு சங்கத்திற்கும், LICக்கும், சங்கங்களுக்கும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் செலுத்தப்படாமல் உள்ளன. இந்த பிரச்சனையை BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைமை BSNL CMDயின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் கார்ப்பரேட் அலுவலகம் உள்ளதாகவும், 31.12.2018க்குள் இந்த தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்றும் CMD BSNL நமது பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களிடம் தெரிவித்துள்ளார். தல மட்டங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவோம்.