அக்டோபர், 2018ல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை தவிர ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. அது நமது BSNL மட்டுமே என்பது நமக்கு ஊக்கம் தரும் செய்தியாகும். மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. TRAI வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அக்டோபர் 2018ல் ஜியோ மற்றும் BSNL ஆகிய நிறுவனங்கள்மட்டுமே தங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. அக்டோபர் 2018ல் ஜியோ ஒருகோடி வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தி உள்ள நேரத்தில் BSNL 3.66 லட்சம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. ஜியோ உயர்த்தி உள்ள எண்ணிக்கையை பார்க்கும் போது BSNLன் கூடியுள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக தெரியலாம். ஆனால், இதர நிறுவனங்கள் இழந்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கைகளை ஒப்பிடும் போது BSNL வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது மிகப்பெரிய சாதனையாகும். அந்த மாதத்தில் வோடோபோன் தனது 73.61 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஏர்டெல் 18.64 லட்சம் வாடிக்கையாளர்களையும், டாடா டெலி செர்விசஸ் 9.25 லட்சம் வாடிக்கையாளர்களையும், MTNL 8,068 வாடிக்கையாளர்களையும் மற்றும் RCom 3,831 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன. இந்த அனைத்து நிறுவனங்களும், 1.01 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ள நிலையில் நமது BSNL 3.66 லட்சம் வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ளது என்பது சாதாரண விஷயமல்ல. குறிப்பாக இதர நிறுவனங்கள் 4G சேவையோடு களத்தில் நின்றுக் கொண்டிருக்கும் போது நமது BSNL 2G மற்றும் 3G சேவைகளை மட்டும் வைத்துக் கொண்டு இதனை சாதித்துள்ளது மிகப்பெரிய சாதனையாகும்.
இதனை சாதித்த ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நமது சங்கம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இதனை சாதித்த ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நமது சங்கம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.