BSNLEU வின் வேலூர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் அக்டோபர் 25 மற்றும் 26 தேதிகளில் வணியம்பாடியில் நடைபெற்றது. அக்டோபர் 26 அன்று தேசிய கொடியை தோழர் A.N.J.பிரசாத் ஏற்றி வைத்தார். சங்கக்கொடியை அகில இந்திய உதவி பொது செயலாளர் , மாநில தலைவர் தோழர் S.செல்லப்பா ஏற்றிவைத்தார். மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் S.சிவலிங்கம் தலைமை தாங்கினார், மாவட்டசெயலாளர் தோழர் C.தங்கவேலு , வரவேற்பு நிகழ்த்தினார்.மாநில செயலாளர் தோழர் A.பாபு ராதா கிருஷ்ணன் துவக்க உரை ஆற்றினார் . பின்னர் BSNL-ஐ முன்னேற்றுவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் S.செல்லப்பா மற்றும் முதன்மை பொது மேலாளார் திரு.கே.வெங்கட்ராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர் தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். தோழர் A.N.J.பிரசாத் பணி ஓய்வையொட்டி மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இறுதியில் மாவட்ட தலைவராக S.சிவலிங்கம், மாவட்டசெயலாளராக தோழர் C.தங்கவேலு ,மாவட்ட பொருளாளராக தோழர் V.பிச்சாண்டி ஆகியோர் ஓரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட துணை தலைவர் நா.தாமோதரன் நன்றி கூறி மாநாட்டினை முடித்துவைத்தார்.