அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் 15 சதவிகிதத்திற்கும் கீழான ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிப்பதாக சிலர் வதந்திகளை பரப்பிக் கொண்டு உள்ளனர். சுய விளம்பரங்களுக்காக அவர்கள் இத்தகைய வதந்திகளை பரப்பி வருகின்றனர். இருந்த போதும் 15 சதவிகித ஊதிய நிர்ணய பலனுடன் தான் ஊதிய ஒப்பந்தம் போட வேண்டும் என இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும் உறுதியுடன் இருக்கிறது என்பதை தெளிவாக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. 15 சதவிகிதத்திற்கு கீழான நிர்ணய பலனுடன் கூடிய எந்த ஒரு ஒப்பந்தத்திலும் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும் கையெழுத்திடாது. 01.01.2017ல் பணியில் உள்ள எல்லா ஊழியர்களுக்கும் 15 சதவிகித ஊதிய நிர்ணய பலன் கிடைக்கும். அதே சமயத்தில் ஊதிய விகிதங்கள் என்பது வேறு .அதிகாரிகளுக்கான ஊதிய விகிதங்களை நிர்ணயிக்க 3வது ஊதிய மாற்றக்குழு எந்த ஒரு பார்முலாவை பயன்படுத்தியதோ, அதே பார்முலாதான் ஊழியர்களுக்கும் கிடைக்கும். ஊதிய நிர்ணயத்திற்கான பார்முலாவையும், ஊதிய விகிதங்களை உருவாக்கும் பார்முலாக்களையும் இணைத்து குழப்பத்தை உருவாக்குவது என்பது அவர்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. BSNL ஊழியர் சங்கம் தீர்வு கண்ட 2வது ஊதியமாற்றத்திற்கு பின், வங்கி ஊழியர்களை விட BSNL ஊழியர்கள் பெற்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஊதிய மாற்றத்திற்காக BSNL ஊழியர் சங்கம் இரண்டு நாட்கள் தேசம் தழுவிய வேலை நிறுத்தத்தை நடத்தியது. ஆனால் அந்த போராட்டத்தில் FNTO சங்கம் ஊழியர்களின் புறமுதுகில் குத்தியது. அந்த சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் தாங்கள் கலந்துக் கொள்வதில்லை என நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்து காட்டிக் கொடுத்தது. இதையெல்லாம் ஊழியர்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள்.