Thursday, 13 September 2018

ஊதிய மாற்றக் குழுவின் 4வது கூட்டம்

ஊதிய மாற்றக் குழுவின் கூட்டம் 10.09.2018 அன்று கூட்டுக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஊழியர் தரப்பின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் நிர்வாக தரப்பு உறுப்பினர்கள் துவக்கத்திலிருந்தே எதிர்மறையாக பேசத்துவங்கினர். FITMENT FORMULAவை பொறுத்தவரை 5 அல்லது 0%க்கு மட்டுமே DOT ஏற்றுக் கொள்ளும் என்றும், 15%ஐ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். இதற்கு, 15%க்கும் குறைவான FITMENTஐ தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஊழியர் தரப்பில் உறுதியாக கூறிவிட்டனர். எந்த ஒரு ஊழியருக்கும் STAGNATIONஆல் பாதிப்பு ஏற்படாத வகையில் ஊதிய விகிதத்தின் துவக்க நிலைக்கும், அதிகபட்ச நிலைக்கும் போதுமான அளவில் இடைவெளி இருக்க வேண்டும் என கடந்த மூன்று கூட்டங்களிலும் ஊழியர் தரப்பு தலைவர்கள் நிர்வாக தரப்பிடம் உறுதியாக தெரிவித்தனர். ஆனால் இந்தக் கூட்டத்தில் ஓய்வூதிய பங்கீட்டை தேவையில்லாமல் அதிகமான அளவில் செலுத்துவதை தவிர்க்க இந்த இடைவெளியை முடிந்த வரை குறைக்க வேண்டும் என நிர்வாக தரப்பில் வாதிட்டனர். இதற்கு ஒட்டு மொத்த ஊழியர் தரப்பும் தனது எதிர்ப்பை தெரிவித்தது. அதிகாரிகளுக்கு ஓய்வூதிய பங்கீட்டை அதிகமாக செலுத்த தயாராக நிர்வாகம் இருக்கும்போது ஊழியர்களுக்கு வழங்குவதில் மட்டும் ஏன் இவ்வளவு கவலை கொள்ள வேண்டும் என கடுமையாக வாதிட்டனர். நிர்வாகத்தின் இந்த மனநிலையை கடுமையாக சாடிய ஊழியர் தரப்பு தலைவர்கள், நிர்வாகம் மேற்கொள்ளும் இந்த இரட்டை நிலைபாட்டை ஊழியர்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் எச்சரித்தனர். அப்போது தலையிட்ட ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த், ஊதிய மாற்றத்தில் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் நிர்வாகத்தின் புதிய ஊதிய விகித முன்மொழிவை தெரிவிக்கும் படி GM(SR) அவர்களுக்கு அவர் வழிகாட்டினார். கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய ஊதிய விகிதங்களை நிர்வாகம் இந்தக் கூட்டத்தில் கொடுத்தது.