Saturday, 7 July 2018

STOA இலாகா தேர்வு :

12.06.2018 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் SrTOA(G) பதவி உயர்விற்கான தகுதி தேர்வு நடத்த வேண்டும் என ஊழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்படது. இந்த தேர்வை நடத்த மாநில நிர்வாகங்களுக்கு அதிகாரம் ஏற்கனவே உள்ளதாக கூறிய கார்ப்பரேட் நிர்வாகம் இதற்கென தனியான அனுமதியை கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து தர வேண்டியதில்லை என பதிலளித்தது. எந்த ஒரு மாநிலத்திலும் Sr.TOA(G) தகுதி தேர்வு நடைபெறாததை நமது தலைவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் இதற்கு தேவையான அறிவுறுத்தலை அனைத்து மாநில CGMகளுக்கும் வழங்குவதாக நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. அதன்படி அனைத்து மாநில தலைமை பொது மேலாளர்களுக்கும் TOA கேடரில் உள்ளவர்களுக்கு தேவையான CONFIRMATION TESTகளை 2018, செப்டம்பர் 30க்கு முன்னர் நடத்தி முடித்து விட்டு Sr.TOA தகுதி தேர்வின் அனைத்து நடமுறைகளையும் 2018, டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, 02.07.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது.