நேரடி நியமன ஊழியர்கள் மற்றும் கருணை அடிப்படையில் பணிக்கு வந்த தோழர்களுக்கு சேவைப்பதிவேடு துவக்குவதில் பல இடங்களில் பல முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் தேவையற்ற குழப்பங்கள் உருவாவதால், கார்ப்பரேட் அலுவலகம் அவற்றை முறைப்படுத்தி கடிதம் எழுதி உள்ளது. நேரடி நியமன ஊழியர்களை தற்காலிக பணிநியமனம் (PROVISIONAL APPOINTMENT) செய்யும் போதே அவர்களிடம் காவல்துறை பரிசோதிப்பு அறிக்கை(PVR), கல்வி தகுதி சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவற்றை வற்புறுத்தாமல் சேவை பதிவேட்டை துவக்க வேண்டும். அப்பொழுதே அவருக்கு மருத்துவ அட்டை வழங்க வேண்டும். அதன் பின்னர் விளக்கங்கள் வரும் சமயத்தில் தேவையான மாற்றங்கள் மற்றும் சேர்க்கைகளை சேவைப் பதிவேட்டில் இணைத்துக் கொள்ளலாம். PVR, ஜாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட பணி நியமனத்திற்கு முன் விளக்கங்களை பெறும் நடவடிக்கைகளை எந்த ஒரு காலதாமதமுமின்றி உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. << மேலும் படிக்க >>