BSNLல் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள மாதம் 200 ரூபாய் சிம் கார்டுகளுக்கு பதிலாக அதனை 429 ரூபாய் திட்டத்தை வழங்க வேண்டும் என 13.11.2017 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு தனது துவக்க உரையில் கோரிக்கை வைத்தார். இதனை தேசிய கவுன்சிலின் தலைவராக இருக்கும் DIRECTOR(HR) ஏற்றுக் கொண்டார். இந்த திட்டத்தின் படி மூன்று மாதங்களுக்கு வரம்பின்றி இலவசமாக அனைத்து நெட்வர்க்குகளுக்கும் பேசுவதோடு தினம் 1 GB DATAவும் கிடைக்கும். மத்திய சங்கத்திற்கு தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.