சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையில், அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் கருத்தரங்கம் நடத்துவது என நமது சங்கத்தின் அகில இந்திய மையம் முடிவெடுத்துள்ளது. 2017, மே மாதம் 14ஆம் தேதி இந்த கருத்தரங்கத்தினை போபாலில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெண் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ள இந்த கருத்தரங்கின் விவரங்களை விரைவில் வெளியிட இருப்பதாக மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.